செல்பி எடுத்த ரஞ்சனுக்கு, பிறந்த நாள் பரிசாக தண்டனை - 2 வாரங்கள் பார்வையாளர்களை சந்திக்க தடை
(சி.எல்.சிசில்)
அங்குனுகொலபெலெஸ சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் அங்குனகொல பெலெஸ சிறையில் செல்ஃபி எடுத்தமைக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த சிறைச்சாலையின் ஒழுக்க மண்டபத்துக்கு ரஞ்சன் எம்.பி. அழைத்துச் செல்லப்பட்டு புகைப்படம் எடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது.
இதன்படி சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரிவு 78க்கு அமைய ரஞ்சன் ராமநாயக்க இரு வாரங்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Is it running a circus from the monkey cage?
ReplyDelete