ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிவிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு நேரடி பொறுப்புக் கூற வேண்டியவர்கள், உதவிகள் ஒத்தாசை புரிந்தவர்கள் மற்றும் பொறுப்புக்களை தவறவிட்டவர்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள 22 உணர்திறனுடைய ஆவணங்களையும் சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறும் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
Maattriddaanikal
ReplyDeleteகத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தீர்மானத்தைப் பொதுமக்களாகிய நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.
ReplyDelete