இன மோதலை ஏற்படுத்தும் புகைப்படங்களை பதிவேற்றியவர் கைது
- news1 -
இனங்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்படும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றிய ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
53 வயதான குறித்த நபர் கடந்த மார்ச் 4 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் முகப்புத்தகத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருந்ததாக அஜித் ரோஹன கூறினார்.
சந்தேகநபர் ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் புகைப்படங்களுடன் மேலும் சிலரின் புகைப்படங்களை உள்ளடக்கி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டையும் கருத்து மோதலையும் ஏற்படுத்தும் விதத்தில் புகைப்படங்களை பதிவேற்றியதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
Post a Comment