2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு சிறுபான்மையின, வாக்குகளை பெறும் அபேட்சகரை தேடத் தொடங்கியுள்ளனர்
தற்போதைய அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடித்தல் சார்ந்த பல வாக்குறுதிகளை மக்களுக்கும் மதிப்புக்குரிய காதினலுக்கும் வழங்கி,வர்க்கவாதம்,இனவாதம் மற்றும் இனங்களுக்கிடையே சந்தேகங்களைத் தோற்றுவித்து இவற்றை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களை மேற் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று இந்தத் தாக்குதல் தொடர்பான உனமைகளை மறைப்பதாக தெரிவித்தார். இது காதினலையும்,மக்களையும் ஏமாற்றும் செயலாகும். ஆட்சிக்கு வந்த பின்னரும் அதிகாரங்களை பலப்படுத்த பல் வேறு காரணங்களைக் கூறினர்,அதுவும் நிறைவேறியுள்ளது.ஆனால் மக்கள் தோற்று விட்டனர்.
சிங்கள பௌத்த சங்கைக்குரிய தேர்ரகளின் பிரசாரங்களால் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அவர்களை புறம் ஒதுக்கிய நிலையை கான்கிறோம்.
2020 ஜனாதிபதி தேர்தல் இனவாதம் மத வாதம் போன்றவற்றால் கவரப்பட்டு சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றவர்கள் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு சிறுபான்மையினரின் வாக்குகளையும் பெறும் அபேட்சகர் குறித்து இன்றைய நாட்களிலிருந்தே தேடத் தொடங்கியுள்ளனர்.இதிலிருந்து புலப்படுவது இன்று சிங்கள பௌத்த சமூகத்தின் பொரும்பாலானவர்கள் ஒதுங்கியுள்ளதையும்,அடுத்த பிரதான தேர்தலில் பொருன்பான்மை வாத கோஷம் எடுபடாது என்பதுமாகும் எனத் தெரிவித்தார்.
Post a Comment