வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடி, சீனி வரி மோசடியாகும் - 1590 கோடி ரூபாவாகும்
கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி முதல் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் சீனி இறக்குமதியின் போது வரி மோசடி இடம்பெற்றிருக்காவிட்டால், 15 மில்லியன் பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் -11- ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்ற போது அதனை நாமே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம்.
அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய ஆளும் கட்சியினர் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடி எனவும் தங்களது ஆட்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் கூறினார்கள்.
எனினும் ஆட்சிக்கு வந்ததும் தண்டனை விதிக்கவில்லை. மத்திய வங்கி பிணை முறி மோசடி 1100 கோடி ரூபா, சீனி வரி மோசடி 1590 கோடி ரூபாவாகும்.
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள உதவுமாறு அரசாங்கம் 1000 கோடி ரூபாவினை உலக வங்கியிடம் கோரியது.
இந்த சீனி வரி மோசடி இடம்பெற்றிருக்காவிட்டால் 15 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்க முடியும் என சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.(தமிழ்வின்)
Post a Comment