முஸ்லிம் வர்த்தகர் எரியுண்ட காரிலிருந்து 1.5 லீற்றர் பெட்ரோல் கண்டெடுப்பு - கொலை என ஆதாரம் இல்லை, விசாரணைக்கு 2 குழுக்கள் நியமனம்
கொஹுவலையில் எரிந்த காரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு விஷேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மவுண்ட்லவினியா பதில் நீதிவான், அரசாங்க பகுப்பாய்வாளர், களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு சான்றுகளைக் கண்டறியும் பொருட்டு வருகை தந்தனர்.
கொஹுவலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இந்தச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் இது ஒரு கொலை என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
எனினும் எரியுண்ட வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 1.5 லீற்றர் பெட்ரோல் குறித்து அரசாங்க பகுப்பாய்வாளர் அதிக கவனம் செலுத்துவதாக குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
இதேவேளை சடலம் மீதான பிரேதப் பரிசோதனை களுபோவில வைத்திய சாலையில் இடம்பெறவுள்ளது.
நேற்றிரவு 11.30 மணியளவில் கொஹுவல ஆசிரி மாவத்தையில் எரிந்த காரில் கண்டெடுக்கப்பட்ட சடலத்துக்குரியவர் களுபோவில பாத்தியா மாவத்தையில் வதியும் 33 வயது வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
நம்மட ஆட்சி ஏல ini எப்படி உம் நடக்கும்
ReplyDelete