Header Ads



தமது கட்சியை சேர்ந்த 15 Mp க்கள் தடுத்தும், ஜனாஸா எரிப்புக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்ற சஜித்


- அன்ஸிர் -

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸா, அக்கட்சியை சேர்ந்தவர்கள் தடுத்தும், ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, சஜித் பிரேமதாஸா பாராளுமன்றத்திலும் ஏற்கனவே கருத்துரைத்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பு பொரளையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, மாபெரும் போராட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சஜித் பிரேமதாஸாவும் கலந்து கொள்ளவுள்ளார் என அறிவித்தல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 15 சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸாவை நேரடியாக சந்தித்துள்ளனர்.

ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டமென்பது முஸ்லிம்களுக்கு ஆதரவான போராட்டமாக மாறலாம். சிங்களவர்களின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி இழக்க நேரிடலாம் எனவும் குறிப்பிட்டு, எக்காரணம் கொண்டும் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கக் கூடாதென வாதிட்டுள்ளனர்.

எனினும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுள்ள சஜித், தான் ஜனாஸா அடக்கத்தை ஆதரிப்பதாகவும், முஸ்லிம்களின் விருப்பமின்றி அவர்களின் உடல்களை எரிப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டியதுடன், பொரளையில் நடைபெறும் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தில் நிச்சயம் பங்கேற்பேன் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறே ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்திலும் அவர், திட்டமிட்டபடி பங்கேற்று உரையாற்றியும் இருந்தார். 

இத்தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று 10.03.2021 ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று 09.03.2021 அன்று சஜித்துடன் 21 நிமிடங்கள் நேரடியாக (இருவரும் தனியாக) கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே சஜித் ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தில் தான் பங்கேற்ற இருந்ததை, தமது கட்சியைச் சேர்ந்த 15 பேர் தடுத்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வந்தபோதும், ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு என, அவரிடம் சஜித் பிரேமதாஸா தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

1 comment:

  1. SAJITHUDAYA KATCHIYIL IRUKKUM ANDA 15 SHINGALA M P KALUM YAAR.
    DAIRIAM IRUNDAAL KOORATTUM
    PAARKALAAM.

    ReplyDelete

Powered by Blogger.