STF என தம்மை அடையாளப்படுத்தி பணமும், 4 கைப்பேசிகளும் கொள்ளை
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி நேற்று (23) காலை பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் புகுந்த குழுவொன்று குறித்த வீட்டில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
58 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் 4 கைப்பேசிகளையும் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த கொள்ளையர்கள் சிவில் உடையில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பியகம பொலிஸார் 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment