Header Ads



நாமலுக்கு ஆதரவளிக்கும் சங்கக்கார, மஹேலவின் முடிவு எனக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது – ஹரீன் Mp


முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்காரவும் மஹேல ஜயவர்த்தனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நான் அமைச்சராகயிருந்வேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் இருவரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மறுத்தனர் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது இருவரும் கிரிக்கெட்டிலும் ஏனைய விளையாட்டுகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர், இது எனக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நான் அவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டேன் நான் அவர்களின் பங்களிப்பை பெறுவது குறித்து உறுதியாகயிருந்தேன் நான் அவர்களை எனது வீட்டில் சந்தித்தேன் அவர்கள் அந்த நேரத்தில் அதற்கு இணங்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த அரசாங்கம் பலவீனமான நிலையிலிருந்தது அவர்கள் சர்ச்சையில் சிக்க விரும்பாமலிருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அமைப்புமுறை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என தெரிவித்தார்கள் எனவும் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.