Header Ads



இனவாத அரசியலுக்கு தீர்வை பெறவே, தமிழ் - முஸ்லிம் மக்கள் கைகோர்த்துள்ளார்கள் - இம்ரான் Mp


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

இனவாத அரசியலுக்கு தீர்வினை பெறவே தமிழ் முஸ்லிம் மக்கள் கிழக்கில் கைகோர்த்துள்ளார்கள் இதனை ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பொத்துவில் பொழிகண்டி வரையான போராட்டங்கள் உணர்த்தியிருக்கிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் (06) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் மக்கள் அரசாங்கத்தை எதிக்கிறார்கள் என்பதை நடைபவணி எடுத்துக் காட்டியுள்ளது முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்வது தொடர்பில் எந்த வித மாற்றத்தையும் அரசு கொண்டுவரவில்லை இதனால் முஸ்லிம்கள் மனதளவில் திருப்தியடையவில்லை இது போன்று கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணி சுவீகரிப்பு,ஈஸ்டர் தாக்குதலின் பின் கைது செய்யப்பட்டு எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் தீர்வுகள் இன்மை தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன கேள்விக் குறியாக உள்ளது தமிழர்களின் நினைவுத்தூபிகளை இரவோடு இரவாக இடித்து தள்ளுவதும் ஒரு வகை போக்கை எடுத்துக் காட்டுகிறது அரசியல் கைதிகளின் விடுதலையை சொல்லி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எதை செய்துள்ளது என்பதை அறிவோம். அரசின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் வீதியில் இறங்கிய நடைபவணி மூலமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது  என்றார்.

No comments

Powered by Blogger.