Header Ads



ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது - கெஹலிய


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 ஆம் ஆண்டு அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

தமக்கு தெரிந்தளவில் இதுவரை வெளியுறவு அமைச்சு, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக குழு ஒன்றை நியமிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட காணொளி அதன் அடிப்படைகளுக்கு முரணானது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

3 comments:

  1. நன்றி ஹெகலிய ரபுவெல்ல அவர்களே. சர்வதேச அரங்கில் ஒப்பனைகள் இல்லாத உங்கள் சிங்கள பேரின வாத அரசின் முகத்தை காட்டுவதற்காக கோடி நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. You are making Sri Lanka as worse country. Budhist people will realise soon.They will open eyes soon.

    ReplyDelete
  3. எந்த முகத்துடன் பங்கேற்பது.

    ReplyDelete

Powered by Blogger.