Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுக்ரா முனவரை, ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் - ஞானசாரர்


கொழும்பில் இன்று -02- நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஞானசாரர் தெரிவித்த கருத்துக்கள்

பாரம்பரிய முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் எவ்வாறு நல்லிணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு அண்மையில் தொலைக்காட்சியில் லக்க்ஷபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சுக்ரா முனவ்வர் சிறந்த எடுத்துக்காட்டு காலி கட்டுகொட பகுதியில் உள்ள உலமா சபை மாத்திரம் அடிப்படைவாத கொள்கையற்ற மத சபையாக காணப்படுகிறது.

இனங்களுக்கு மத்தியில் தேசிய நல்லிணக்கம் பலப்பட வேண்டுமாயின் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மாணவி சுக்ரா முனவரை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.ஒரு சில பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் கூட அடிப்படைவாத கொள்கை விதைக்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய செயற்பாடாகும்.அடிப்படைவாதத்துக்கு தீர்வு காணவிடின் அது எதிர்காலத்தில் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை விட பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றார்.

1 comment:

  1. ஞான உனக்கு ஞானம் வெறி இல் மட்டுm இல்ல இந்திய ஈ nachathielலும் உனக்கு முக்கிய பங்கு இருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.