ஹுனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம்
-Tn -
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக, வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்கிடம் நேற்று -21- மன்னார் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
அவரின் மன்னாரிலுள்ள அலுவலகத்துக்கு காலை 11.30 மணியளவில் சென்ற மன்னார் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதன்போது நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா? கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment