Header Ads



பள்ளிவாசல் நிர்வாகிகளே, இது நியாயமா..?


கெவலக் டவுன் மயுரா பிளேஸில் உள்ள பள்ளிவாசலுக்குச் இன்று வெள்ளிக்கிழமை (05.02.2021) ஜம்ஆப் பள்ளிவாசலுக்கு ஜம்ஆத் தொழுவதற்காக சென்றிருந்தேன்.  அங்கு ஒர் ஊடகவியலாளருக்கு நடைபெற்ற சம்பவத்தினை  இங்கு பகிா்ந்து கொள்கின்றேன்.  காலை 10 -12 மணிவரையில் ஜாவத்தையில் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஆலயத்தில் காஸ்மீா் ்சம்பந்தமான நிகழ்வினை ஊடக ஆவணைக்காக சென்று அந் நிகழ்வு முடிவுற்றதும் உடன்  ஜம்ஆத் தொழுவதற்காக அருகில் உள்ள ஜாவத்தை பள்ளிவாசலுக்குச் சென்றேன் அங்கே கேற்றின் முன் வாயலில் இருந்தவா்கள் ஏற்கனவே உள்சென்றவா்கள் தொழுத பின் மீண்டும் உள் எடுப்போம் அதுவரை வீதியில்  45 நிமிடம் காத்திருக்கும் படி கூறினாா்கள். 

அப்போது போகும் வழியில் கெவலக் டவுன் மயுரா பிளேஸில் உள்ள பள்ளியில் தொழுதுவிட்டுச் போவோம் என நினைத்து அங்கு சென்றேன். அங்கும் பள்ளிவாசல் முன் கேற்றில் மூடி இருவா் இருந்தனா். அருகில் ஒரு முஸ்லிம் பொலிஸ் அதிகாரியும் அங்கு கடமையில்  இருந்தாா்.  வரிசையாக நில்லுங்கள் நாங்கள் இடம் கிடைக்கும்போது உள் எடுப்போம் எனக் கூறினாா்கள். நான் 10 நிமிடமளவில் கியுவரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் வரிசையில் நின்ற 50பேர் உள்ளுக்கு எடுத்தாா்கள். என்னில் ்இருந்து பின் 50 பேர்மட்டில் தடுத்து நிறுத்தினாா்கள். மேலும் உள் இடம் வரும்போது உங்களை எடுக்கின்றோம் என்றாா்கள். நானும் மிகுதி 50 போ்மட்டில் காத்திருந்தோம். அதன் பின்னா் பள்ளி அருகில் காாில் இறக்கும் ஹாஜி நீங்க வாங்க, டொக்டா் நீங்க வாங்க, மகல்லாவாசி நீங்க வாங்க என உள் எடுக்கின்றனா். அப்போது தான் அங்கு கேற்றில் இருந்த இருவரிடம் கேட்டேன்  பள்ளிவாசல் என்பது பதவி பட்டம் ஆள்பாா்த்து தொழ அனுமதிப்பதில்லை பள்ளிவாசலில் எல்லோறும் சமம் என்றேன். நாங்கள் 20 நிமிடமாக இங்கு காத்திருக்கின்றோம். நீங்கள் செய்வது தவறு என்றேன். அதன் பின்னா் அவா்கள் என்னிடம் வாக்குவாதம் பட்டாா்கள். ஒருவாறு நானும் அங்கு சென்று தொழுதேன் அதன் பின்னா் அங்கு இருந்த கேட்டில் இருந்த ஊழியா்கள் பிரளியை கிளப்பிவிட்டாா்கள். இவா் இங்கு தொழுபவா்களையெல்லாம் படம் பிடித்துள்ளாா். இதனை ஊடகங்களுக்கு போடப்போடுகின்றாா். அடுத்த முறை நீங்கள் ஜூம்ஆப் தொழ முடியாது என்று எல்லோறும் என்னை வலைத்து விசாரித்தாா்கள் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் எனது ஊடக அடையாள அட்டை எனது போன் பாஸ்வேட்டைக் காட்டி திறந்து படங்கள் உள்ளதா எனப் பரிசித்தாா்கள். அங்கு பள்ளிவாசல் முகப்படம் எனது கமராவில் நான் எடுத்திருந்தேன். அதனை விசாரித்தாா். 

நான் அனேகமாக புதிதாக ஜம்ஆப் பள்ளிவாசலுக்குசி் சென்றால் அதனை எடுப்பது வழக்கம் இல்லை அதனை பள்ளி நிர்வாகம் அதனை பாா்த்து அழித்து விட்டு போனை தந்தாா்கள்.  ஆனால் அங்கு தடியெடுத்தவன் எல்லாம் பொலிஸ்காரனாகிவிட்டாா்க்ள. நமக்கு அடுத்த முறை  ஜமஆ தொழமுடியாது இவா்  இங்கு படம் புடித்து ஊடகங்களுக்கு போடப்போடுகின்றாா். சுகாதார திணைக்களம் ஜம்ஆவையும் நிறுத்தி விடும் என அங்கு வந்தவா்களுக்கெல்லாம் கட்டுக்கதை கட்டிவிட்டனா்.  பள்ளிநிா்வாகம் தமது பள்ளிவாசலில் முன்றலில் கடமைக்கு அமா்த்தும்போது  நிதானமாக சாந்தமானவா்களை நியமிக்க வேண்டும்.  எனக்கு நடைபெற்றது போன்று வேறு ஒருவருக்கும் நடைபெறாமல் பாா்துக் கொள்ளல் வேண்டும். என்னை வந்தவா் போனவா் எல்லாம் அதட்டினாா்கள் எனது பேக் பரிசோதிக்க வேண்டும். எனது அடையாள அட்டை எடுத்து படம் பிடித்தா்ாகள் எனது தலைக்கவசத்தில் அடித்தாா்கள் இதனை நான் பெரிது படுத்தவில்லை.

ஆனால் பள்ளிவாசல் என்பது ஒரு அமைதியான அல்லாஹ்வின் சொத்து அதனை நிர்வகிப்பவா்கள் பதவி பட்டம் பாா்த்து தொழு அனுமதிப்பது கூடாது எல்லோறும் அல்லாவின் முன் சமம் என சிந்தித்தல் வேண்டும் நல்ல நிர்வாகம் பள்ளிவாசலை நிர்வகிக்க வேண்டும்.  ஏதோ கொவியை காரணம் காட்டி நாமும் சர்வதிகாரி போன்று செயற்படக் கூடாது.

Ashraff A Samad

9 comments:

  1. This is what happening acju administered mosques....can any one do any action????

    ReplyDelete
  2. தகுதி இல்லாதவர்கள் நிருவாகத்தில் இருந்தால் இப்படித்தான் நடக்கும்.

    ReplyDelete
  3. முஸ்லிம் யார்? பள்ளி வாயில் தனியுடைமையா? ஏன் இப்படி நம்ம ல நாம திருத்த முடியாம இன்னும் இருக்கிறோம்?

    ReplyDelete
  4. நிர்வாகத்தினர் கவனமாக இருந்ததில் குறைகாண முடியாது. நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்பகுதிக்கு பழக்கப்படாத ஒருவர் வந்தால் அதுவும் வாக்குவாதம் செய்தால் அவதானம் அதிகரிக்கத்தான் செய்யும். வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டால் எதிர்விளைவுகளை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  5. Sometimes this type of things take place.They(mosque admin.) must deal in a polite and humanitarian way.I too encountered an unusual incident in a mosque in suburb of Colombo.They should not favour anyone except those who come early.Rasoolullah showed right path.Lead an exemplary life to fullfil the religion Islam.Niyas Ibrahim.

    ReplyDelete
  6. This the Masjid obtained red carpet & Cooler from ?
    . If you have money you get recognition unfortunately.

    ReplyDelete
  7. ஜம் இய்யாவுக்கு எதிரானவர்கள் இப்போது கிழம்பி விடுவார்கள்... இதற்கு ஜம் இய்யா தான் காரணம். ஜம் இய்யா தலைவரை பதவி விலக சொல்லி போடு பிடிப்பார்கள். முதலில் இதை பதிவிட்டவர் விளங்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் அந்த மகள்ளா வாசிகளுக்குத்தான் முதலிடம் என்று. எனக்கு தெரிந்து ஒரு சில ஏரியாவில் மகள்ளா வாசிகளுக்கு சுழற்சி முறையில் அனுமதி வழங்குகின்றார்கள். மற்றது இப்போது இருக்கும் சூழ்நிலையில் முஸ்லீம்களின் மீது காழ்புனர்வோடு தருனம் பார்த்து அன்னிய ஜாதிகள் இருக்கும் வேலையில் யாரையும் நம்ப முடியாது. இந்த கட்டுறையை எழுதியவரையும் சேர்த்துத்தான்.

    ReplyDelete
  8. obviously the administration and the people who were there behaved badly, but ur attitude made them behave badly. even though its ur habit of capturing pics of the mosque u newly go to pray, its not a right time to do it. they might have understood as u r a media person when u clicked. u must be educated and un-maturated person.

    ReplyDelete
  9. Please use maximum space in the masjid and not restrict 50 people.

    ReplyDelete

Powered by Blogger.