Header Ads



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், என்பதற்குள் சகவாழ்வு அடங்கியிருக்கிறது - மகிந்த தேசப்பிரிய


(அஷ்ரப் ஏ சமத்)

தொலைக்காட்சி ஊடகவியலாளா் எம். ஜே பிஸ்ரின் மொஹமத் எழுதிய ”சகவாழ்வியம் ” எனும் நுால் வெளியீட்டு வைபவம் இன்று (6.2.2021) கொழும்பு தமிழ்சங்கத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் தோ்தல் ஆணையாளரும் தற்பொழுது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நுாலின் முதற்பிரதியை  எம்.ஆர் பௌன்டேசனின் தலைவா் மொஹமட் ஜகீன் பெரோஸ் மொஹமட் பெற்றுக் கொண்டாா். அத்துடன் தோ்தல் ஆணைக்குழுவின் உறுப்பிணா் எம்.எம். மொஹமட், நுால்ஆய்வுரையை கொழும்பு பல்கலைககழகத்தின்  சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி பரீனா றுசைக்,  நுால்ஆய்வுரையை முஸன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் மயில்வாகனம் திலகராஜ் ஏற்புரையை நுாலாசிரியா்  பிஸ்ரின் முகம்மத் நிகழ்த்தினாா்.  முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா்  ஏ.ஜே.எம். அஸ்ரப் கலந்து கொண்டு அதிதிகளுக்கு  நுாலின் பிரதிகளை வழங்கி வைத்தாா்.

இங்கு உரையாற்றிய மகிந்த தேசப்பிரிய -

  ஊடகவியாளாா்   பிஸ்ரின் மொஹமட்   சகவாழ்விியம்  என்ற நுாலை  இக் காலகட்டத்தில் வெளியிட்டு இருப்பது  சாலச் சிறந்ததாகும்.. இதனை சிங்கள மொழிமாற்றம் செய்து வெளிக்கெனர உதவு மாறு  எமது முன்னாள் தோ்தல்  ஆணையாளர் மொஹமட் அவா்களை  வேண்டிக் கொண்டாா். சகாழ்வு என்பது  தோ்தலினைக் குறிக்கின்றது. இலங்கையில்  வாழ்ந்த பிரஜைகளுக்கு  முதன் முதலில் வாக்களிக்கும் உரிமை  1931ஆம் ஆண்டே  கிடைக்கப்பெற்றது.  தற்பொழுது 90 வருடங்களை  தோ்தல் வாக்களித்து வருகின்றோம்   இந்த நாட்டில் இரண்டே இரண்டு நிகழ்வுகள்  அவசியமாக நடைபெறும்.. ஒன்று தோ்தல் மற்றது மரணம் தற்பொழுது கொரோணாவும் வந்துள்ளது. இவற்றுக்கு  ஜாதி மதம்  நிறம் மொழி  என்ற வித்தியாசம்  பாராமால் மனிதனுக்கு கிடைப்பது ஒரே ஒரு வரம் தோ்தலாகும்  அனுராதபுரத்தில்  பிஸ்ரின் மொஹமத் வாழும் ஊாா்  ஒரு சகவாழ்வியத்திற்கு எடுத்துக் காட்டக்கூடியதான ஒரு பிரதேசம். அங்கு  தமி்ழ் பேசும் முஸ்லிம்களும் சிங்களம் பேசும் பௌத்தா்களும் அங்கு சகஜீவனுடன்  வாழுகின்றனா் அங்கு பிறந்து வாழ்ந்த  பிஸ்ரின் சகவாழ்வினைக் கற்றுக் கொண்டதன் விளைவாகவே  அந்த  அனுபவங்களை வைத்தே அவா் சகவாழ்வியம் என்ற  நுாலைப்  பகிர்ந்து கொள்கின்றாா்.  இந்த  வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில்  அபாயா, சாரி, தேசிய உடுப்பு ,நீண்ட காற்சட்டை அணிந்து ஒரு குடையின் கீழ் சகல இன மத நிற வித்தியாசமின்றி  மூவினங்களை சாா்ந்தவா்களும் இங்கு கூடியிருக்கின்றோம். இதுவே சகவாழ்வு ஆனால் நம்மில் இன்னும் சிலா் இன ,மத நிற குல என பிரிந்து நின்று வாழ்கின்றாா்கள். நாம் இந்த நாட்டில் சமாதானமாக வாழப்பழகிக் கொள்ளல் வேண்டும்.  ஒவ்வொறு மதமும் அன்பு சாந்தி சமதானத்தினையே நமக்கு போதிக்கின்றது. இஸ்லாம் மதம் பிஸ்மில்லா இர்ராஹூமான் இர்ராஹிம் என்ற குர் ஆன் ஆரம்ப வசனத்தில் இருந்தே , ஆரம்பிக்கின்றது. இதுவே  எமது  ஆரம்பமே சகவாழ்வுகள்  அடங்கியிருக்கின்றது. எனவே பிஸ்ரின் எழுதிய இந்த சகவாழ்வியம் என்ற நுால் எழுதி வெளியிட்டமைக்காக அவரை நான் பாராட்டுகின்றேன் எனக் குறிப்பிட்டாா் மகிந்த தேசப்பிரிய.





1 comment:

  1. HOW CAN I GET THIS BOOK PLEASE CONTACT firdouzmjm@gmail.com

    ReplyDelete

Powered by Blogger.