இலங்கை பெற்றோர்களுக்கான ஓர் முக்கிய எச்சரிக்கை
தற்போது பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கையடக்க தொலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவர்கள் அதற்கு அடியமையாவதற்கான நிலைமை காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஆயிஷா லொகுபாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையால் மாணவர்களின் மூளை செல்கள் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் கற்றல் நடவடிக்கைகள் தற்போது இணையளத்தளம் ஊடாக இடம்பெற்று வருவதால் மாணவர்களுக்கு இடையில் கையடக்க தொலைபேசிகள் பிரபலமான கருவியாக மாறியுள்ளன.
இந்தநிலையில் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் கையடக்க தொலைபேசிகளை பிள்ளைகளிடம் இருந்து தூரமாக வைப்பதற்கு பெற்றோர்கள் செயற்பட வேண்டும்.
அத்துடன் பிள்ளைகள் இணையளத்தளங்களை பயன்படுத்தும் போதும் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஆயிஷா லொகுபாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment