மடுல்சீமையில் உலக முடிவை காணச்சென்ற ஊடகவியலாளரைக் காணவில்லை
- பாலித ஆரியவன்ஸ -
மடுல்சீமை பிரதேசத்திலுள்ள சிறிய உலக முடிவைப் பார்வையிட சென்ற 12 பேரை அடங்கிய குழுவில் ஒருவர் நேற்று (6) காணாமல் போயுள்ளாரென, மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போன ஊடகவியலாளர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் மக்கொன-களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தினுர விஜேசுந்தர என்பவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மழையுடன் பனி படர்ந்திருந்த நேரத்தில் முகாம் அமைத்து குறித்த குழுவினர் தங்கியிருந்த நிலையில், கடும் குளிர் காரணமாக குறித்த இளைஞர் வாகனத்துக்குச் சென்ற போதே, காணாமல் போயுள்ளார்.
இவரைத் தேடும் பணியில் இராணுவம், பொலிஸ் விசேட படையினர், மடுல்சீமை, பிபிலை, லுணுகல ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில், பனி காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டு , நாளை(8) காலை மீண்டும் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Post a Comment