Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு அழைத்துவருவதில் தாமதம் ஏன்..?


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக, விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, தொழில் அமைச்சர நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதில்; தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணம், தனிமைப்பாடுத்தல் நிலையங்களில் போதியளவு இடவசதி இன்மையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக நிதியம் ஊடாக, ஒன்பது மாகாணங்களில் புதிதாக தனிமைப்படுத்தல் நிலையங்களை ஸ்தாபித்து, அந்நிலையங்களில்  வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்களை தனிமைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.

 

1 comment:

  1. Try To make it home quarantine all countrys are doing same thinks.

    ReplyDelete

Powered by Blogger.