ஐக்கிய மக்கள் சக்தியின் 'முஸ்லிம் புலமைத்துவ சபை' ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஐக்கிய மக்கள் சக்தியின் “முஸ்லிம் புலமைத்துவ சபை” ஆரம்ப நிகழ்வு நேற்று (03) மாலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
கொவிட் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு வரையறுக்கப்பட்ட துறை சார் நிபுனர்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தவிசாளர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், பிரதி தவிசாளர் கௌரவ எச்.எம்.ஹலீம், ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment