ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மூலம், இனவாதிகளே இலாபம் பெற்றுக்கொண்டுள்ளனர் - சுனில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் மூலம் இனவாதிகளே இலாபம் பெற்றுக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
இதனால், மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் அரசாங்கத்திற்கு இடையில் உடன்பாடு இருக்கலாம் என தான் நம்புவதாகவும், இதன் காரணமாகவே குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
வருடாந்தம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகவும் அரசாங்கம் அந்த அறிக்கைகளில் தங்கி வாழ்வதாகவும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Post a Comment