எங்கள் பூர்வீக நிலங்களை அபகரிக்காதே - ஆதிவாசிகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோ மற்றும் சுற்றுச் சூழல் நீதி மையத்தால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதிவாசிகளின் பூர்வீக நிலங்களை மகாவலி அதிகார சபை கையகப்படுத்தி அதனை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, சோளப் பயிரச் செய்கை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளதற்கு தடை விதிக்குமாறு கோரி, இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment