எதிர்க்கட்சி குற்றஞ்சுமத்தியதால், ரஞ்சன் தனி சிறைக்கு மாற்றம் - இனி எந்த உயிர் அச்சுறுத்தலும் இல்லை
- பா.நிரோஸ் -
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, ரஞ்சன் ராமநாயக்க தனியான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையிலான இன்றைய (23) பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரஞ்சன் ராமநாயக்க 14 கைதிகளுடன் மலசலக் கூடம், தொலைக்காட்சி வசதிகளுடன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் இருந்தார்.
எனினும் அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக எதிர்கக்ட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியதால், அவர் தனியான சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு எந்தவிதமான உயிர் அச்சுறுத்தலும் இனி இல்லை.” எனவும் தெரிவித்தார்.
Post a Comment