உலமா சபையை தடைசெய்ய வேண்டும், 11 வது தடவையாகவும் உலக பலமிக்க தலைவராக ரிஸ்வி முப்தி - ஞானசாரர்
- வீரகேசரி -
பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் புரையோடி போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து தொடர்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளோம். உண்மைகளை குறிப்பிடுவதால் ஒரு தரப்பினரால இனவாதிகள் என சித்தரிக்கப்பட்டுள்ளோம். பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம் சமூகத்ததுக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது முன்வைக்கப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்தளவுக்கு வலுப் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இதற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இதுவரையில் காணப்பட்ட தவறை தற்போதைய அரசாங்கமாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாகும்.69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே காணப்படுகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்குவதற்கு உலமாக சபை பாரிய பங்களிப்பு செய்துள்ளது. ஜோர்தான் நாட்டில் அரச சார்பற்ற அமைப்பு கடந்த வாரம் உலகில் பலம்வாய்ந்த முஸ்லிம் தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பெயர் பட்டியலில் 11 ஆவது தடவையாகவும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளடக்கப்பட்டுள்ளார்.பல்வேறு செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு இவரின் பெயர் 11 ஆவது தடவையாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
24 மாவட்டங்களில் 155 உலமாக சபைக்காக காரியாலயங்களை ஸ்தாபித்தல், இஸ்லாமிய சட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்தல், இஸ்லாமிய மார்க்கத்திற்கு பிற மதத்தவர்களை இணைத்தல், இஸ்லாமிய கல்வியை போதித்தல் உள்ளிட்ட காரணிகளை சிறப்பாக செய்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் உலமா சபை தடை செய்யப்பட வேண்டும்.கடந்த காலங்களில் இச்சபையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு செய்துள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட விசாரணை குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத விவகாரத்தில் கடந்த கால அரசாங்கம் செய்த தவறுகளை தற்போதைய அரசாங்கமும் தொடரக் கூடாது.
இந்தக் கதரல்களுக்கு கூப்பாடுகளுக்கு புலம்பலுக்கு எங்களைப் போன்ற ஊர் பேர் தெரியாதவரகளாலும் செமத்தியான பதிலை அளிக்க முடியும். ஆனால் தகுதியானவரகள் உரைக்கும்படியாக பதில்களை வழங்கும்போது அது ஞானசாரர் போன்றவரகளுக்கு உரைப்பாகவும் சூத்தில் சுண்ணாம்பினைப் பூசினால் என்ன நடக்குமோ அதுபோன்றும் இருக்கும். ஆனால் அந்தப் பதில் அரைவேக்காடாக இருக்காமல் அந்த மனிதனைச் சென்று அடையக்கூடியவிதமாகவும் இருத்தல் வேண்டும். யாராவது உடனடியாக முன்வருவார்களா.
ReplyDeleteHow about the Sinhala Buddhist Racism that you are spearheading? Didn't you spearhead the attacks on Muslims in Aluthgama, Beruwela etc. in 2014?
ReplyDeleteIf action is to be taken against Rizvi Mufthi who has NOT done anything to encourage or otherwise help Zahran, Shouldn't action be taken against you very much before that?
Even in the case of Zahran, it is Buddhist monks like you who made Zahran's work much more easier because of the Terror attacks against Muslims by Sinhala Mobs you fervently encouraged in Aluthgama, Beruwela etc. followed by attacks in Ampara, Digana and Kandy District, Minuwangoda and neighbourhood.
You were sent to jail for a lesser offence but were lucky to be given a Presidential Pardon by the former President and you have started your old tricks again. Monks like you are the BIGGEST THREAT to Sri Lanka.