யாழ்ப்பாணத்திற்கு காலூன்றுகிறது சீனா - இந்தியா கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கவே சீன நிறுவனத்திற்கு அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்வதற்கு முன்பே இது தொடர்பில் இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பு வெளிப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கை தனது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்புகிறது என்ற அடிப்படையில் இந்தியாவின் எதிர்ப்பு இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
நெடுந்தீவு இந்திய கடலோர நகரமான ராமேஸ்வரத்திலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
OK, then tell us at least who is that Pulasthini...and by whom that sheithaan brought..!
ReplyDelete