Header Ads



புலஸ்தினி ரோவிற்கு தகவல்களை வழங்கினார் - ஜனாதிபதி ஆணைக்குழு எதனையும் தெரிவிக்கவில்லை - சு.க.


-TL-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புபட்டிருந்தவர் என கருதப்படும் சாரா ஜஸ்மின் - புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு சென்றமை குறித்து தாக்குதல்கள குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் எதனையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய சகாவான சாரா ஜஸ்மின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து, இந்தியாவின் ரோவிற்கு முன்கூட்டியே தகவல்களை வழங்கினார் என தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் போது, சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது அங்கிருந்து தப்பிய புலத்சினி அதன் பின்னர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

1 comment:

  1. dot waste time ,all prisioner in the name of terrorism , who arrested by rajapksa terrorist army should realease , real terrorist rajapksa ,, rajapksa terrorist army shold arrest them

    ReplyDelete

Powered by Blogger.