Header Ads



என்னை எவரும் ஓரங்கட்டவில்லை, நான் ஆர்ப்பாட்டமின்றி பணிபுரிய தீர்மானித்துள்ளேன் - பிரதமர் மகிந்த


என்னை எவரும் ஓரங்கட்டவில்லை நான் ஆர்ப்பாட்டமின்றி பணிபுரிய தீர்மானித்துள்ளேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் என்ற போதிலும் நீங்கள் ஓரங்கப்பட்டுள்ளீர்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றதே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்படியொன்றும் இல்லை ,நான் அதிககவனத்தை ஈர்க்காத விதத்தில் பணிபுரிய தீர்மானித்துள்ளேன்,நாங்கள் எல்லாநேரத்திலும் மக்களின் கவனத்தை ஈர்க்க முயல்வதில்லை, வெளியில் அதிகம் தெரியாமல் பலர் மிகவும் கடினமாக பணியாற்றுகின்றனர், நான் விளம்பரம் தேடாமல் அதிக வேலையை செய்கின்றேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mr. Prime Minister, whatever you may say, don't expect the people to believe you Always. And DONT Forget, the people are the Ultimate Judges.

    ReplyDelete

Powered by Blogger.