Header Ads



FALSE PROPAGANDA AGAINST THE ULAMA USING THE NAME OF THE JAFFNA MUSLIM WEBSITE – DON’T BE FOOLED.


Considering it as a trust and responsibility (amanah), “Jaffna Muslim” is continuing to function as an online media outlet that is striving at the forefront to make available to the Community in a timely manner reports on the multitude of Issues faced by the community, Alhamdu Lillah. 

A major  part of the contribution towards its progress  is due to the Socially responsible, honest, selfless and dedicated reporters and subscribers. However, we are perturbed to note that there have been sporadic attempts by some anti-social elements to tarnish our image  and undermine the unshakable loyalty the community has extended towards our website. We are bringing this to the notice of our Community with great pain and sadness.

Additionally, we note that our site's name is being falsely used in certain social media networks to tarnish the Image of the Head of the All Ceylon Jammiyyahtul Ulama, Mufti Rizwe, in a false and derogatory manner. We most vehemently condemn these defamatory messages being shared on social networks using our name. We also wish to inform with responsibility that our media has never been involved in such crude and derogatory activities.

 We have no necessity nor any need to denigrate and discredit either The All Ceylon Jamiyyathul Ulama, nor any of the other Organizations and Associations involved in our community activities, or its social service community volunteers, Alims and Intellectuals who function as their backbone. 

Seeking to gain pleasure by  trying to cause disgrace to the community and its brotherhood is a Major sin in the sight of Allah. Therefore, Let us avoid engaging in such acts as it entails severe punishment in the Hereafter! 

ACJU Secretary Moulavi MSM Thasim contacted “Jaffna Muslim Network” in this regard. He expressed  that, his hope is that the Jaffna Muslim  Social Media Website will not engage in such derogatory and despicable activities.

Those who spread fabricated false information on social media should fear Allah. Moulavi MSM Tashim pointed out that in this time of crisis for our Ummah, those who use the name of the Muslim media to disrupt our social cohesion and engage in acts of sabotage are doing a great dis-service to the community. Moulavi Thassim also stated that he has had discussions with the Legal Team with regard to the possibility of taking legal action against those involved in the ugly, vile, false, fabricated and uncivilized propaganda linking the name of the Jamiat Ulema, the Ulema and the Jaffna Muslim Website.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் இன்னோரன்ன விவகாரங்களை அமானிதமாகப் பேணி, தகுந்த வேளையில் அவைபற்றி சமூகத்திற்கு வழங்குவதில் முன்னின்று உழைக்கும் ஓர் இணையத்தள ஊடகமாக ஜப்னா முஸ்லிம் இயங்கிவருகின்றது. அல் ஹம்து லில்லாஹ்.

இதன் வளர்ச்சியில் பாரிய பங்கு, சமூகப் பற்றும், தூய எண்ணமும் கொண்ட எமது எழுத்தாளர்கள், வாசகர்களுடையதாகும். எனினும், சில சமூக விரோதிகளால் எமது இணையத்தளத்தினை களங்கப்படுத்துவதற்கும், அதன் மீது சமூகம் வைத்துள்ள அசையாத விசுவாசத்தினை, சீர்குலைப்பதற்கும் சில கீழ்த்தர முயற்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன என்பதை மிகுந்த மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்.

அத்துடன், எமது இணையத்தளத்தின் பெயரைப் பயன்படுத்தி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களை கேவலப்படுத்தும் வகையிலான பொய்யான, அவதூறான செய்தியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமையை மிகவும் வண்மையாகக் கண்டிப்பதுடன், எமது ஊடகம் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளில் இதுகால வரையில் ஈடுபட்டது கிடையாது என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையோ, அல்லது எமது சமூகத் தொண்டுகளில் ஈடுபடும் ஏனைய சங்கங்களையோ, அவற்றின் முதுகெலும்பாக செயலாற்றும் சமூகத் தொண்டர்களையோ, ஆலிம்கள், புர்திஜீவிகளையோ கேவலப்படுத்த வேண்டிய எத்தகைய தேவையும் எமக்குக் கிடையாது.

எனவே, சமூகத்தினதும், எமது சகோதரர்களதும் மானத்தைப் போக்கி, இன்பமடைவதானது அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். மறுமையில் கடுமையான தண்டனைக்குக் காரணமாகும் என்ற வகையில் இவ்வாறான செயற்களில் ஈடுபடுவதைத் தவித்துக் கொள்வோமாக!

மேலும் இதுபற்றி ACJU வின் செயலாளர் மௌலவி MSM தாசிம், Jaffna Muslim இணையத்துடன் தொடர்புகொண்டு உரையாடியாடினார். இதுபோன்ற கீழ்த்தரமான செயற்பாடுகளில் Jaffna Muslim இணையம் ஈடுபடாது என்பதே அவருடைய நம்பிக்கையாகும்.

இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்களை, சமூக ஊடகங்களில் பரப்புவோர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். எமது உம்மத்துக்கு நெருக்கடியான இக்காலத்தில், எமது சமூக ஒற்றுமையை குழப்புவும், முஸ்லிம் ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி, நாசகாரச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இதிலிருந்தும் தவிர்ந்து கொள்வதே அவர்கள் சமூகத்திற்கு செய்யும் பேருதவி என்றும் மௌலவி MSM தாசிம் சுட்டிக்காட்டினார்.

ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரையும், உலமாக்களையும், Jaffna Muslim இணையத்தையும் தொடர்புபடுத்தி அசிங்கமான, கீழ்த்தரமான, பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, நாகரீகமற்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்துள்ளதாகவும் தாசிம் மௌலவி மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.