பங்களாதேசை சேர்ந்த கனடா பிரஜையை, நம்பி ஏமாந்த பயங்கரவாதி சஹ்ரான்
ஜஹ்ரான் ஹாசிமே தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட குழுவின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமே, அவர் 2019 மார்ச் இருபத்தியேழாம் திகதி பாணந்துறையில் இடம்பெற்ற இரகசிய கூட்டத்தில் தான் நேரடியாக தற்கொலை குண்டுதாக்குதலில் பங்கேற்க போவதாக தெரிவித்தார் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பங்களாதேசின் ஐஎஸ் அமைப்பின் தலைவரான அஹமட் சௌத்திரியை ஜஹ்ரான் ஹாசிம் பின்பற்றினார்.
பங்களாதேசை சேர்ந்த கனடா பிரஜையான அஹமட் சௌத்திரி 2016 ஜூலை மாதம் டாக்காவில் குல்சான் கபேயில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக காணப்பட்டார் என தெரிவித்துள்ள ஆணைக்குழு சௌத்திரி அந்த தாக்குதலில் பங்கெடுத்து உயிரிழந்தார் என ஜஹ்ரான் ஹாசிம் கருதினார் ஆனால் சௌத்திரி உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
நாடகங்கள் புதிய புதிய உருவெடுத்து,கவர்ச்சியான வகையில் புதிய நாடகமாக அரங்கேரத் தயாராகிவருவதாகத் தெரிகிறது.எது உண்மை, எது பொய் என்பதை அல்லாஹ்தான் அறிவான்.
ReplyDeleteIt is confusing. If Zahran believed that Chaudry, the Bangladeshi leader of ISIS died in a suicide blast in July 2016, how could he have followed him to lead an attack, 3 years later, in 2019?
ReplyDeleteஇத்துடன் முற்றும்..
ReplyDelete