சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு யோசனையை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான செயல்கள் அல்லது தவறுகளுக்கு முன்னாள் ஜனாதிபதியின் தரப்பில் பொறுப்புள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளது.
சட்டமாஅதிபர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடு;ப்பது குறித்து ஆராயவேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
Post a Comment