மியன்மாரின் இராணுவ ஆட்சி - கவலை தெரிவித்த இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு
மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றி, தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தமது கவலையினை வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சி நிலமே அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான அதிகாரங்களை கொண்டு தமது பணிகளை நிறைவேற்றியமைக்காக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இது ஜனநாயக கோட்பாடுகளுக்கு மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சி நிலமே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மியன்மார் அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment