இராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்
இந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, அந்த அமைச்சர் யார்? என வினவினார்.
இதேவேளை, உயர்த்த ஞாயிறுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய உப-குழுவை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கவில்லை.
அதேபோல, இந்த சபைக்குள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் உள்ளனர். அதனால்தான் தான், உப-குழுவை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் யார், சித்தியடையாதவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல்களை தரவும் எனக் கேட்டுக்கொண்டார்.
2
இராஜாங்க அமைச்சர் ஒருவரை பெண் ஒருவர் செருப்பில் தாக்கியமையினால் பரபரப்பு நிலைமை ஏற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளாக குறிப்பிடப்படுகிறது.
அதன் பின்னர் அந்த பெண்ணை நிகழ்வில் இருந்து வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்தாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
AMAICHARKAL SHERUPPAAL ADIVAANGUM
ReplyDeleteKAALAM IVALAVU SHEEKIRAMAAKA
VARUM ENRU KANAVIL KOODA
NINAITHATHILLAI.