Header Ads



ஜெனிவா அமர்வு எதிர்பார்ப்புடன் நாளை ஆரம்பம் - இலங்கை நிலவரம் சூடுபிடிக்கலாம், தினேசும் உரை


பலரும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  46 ஆவது கூட்டத்தொடர்,  ஜெனிவாவில் நாளை(22) ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத் தொடரானது மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வழமைபோன்று இம்முறையும் இலங்கையின் மனித உரிமை விடயம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கை குறித்து  புதிய பிரேரணை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளி மூலமான கலந்துரையாடலில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள்  விடயம் குறித்து ஆராயப்படவுள்ளது. 

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, எதிர்வரும் புதன்கிழமை கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது, இலங்கை அரசாங்கம் சார்பில் அவர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.  எனினும் இதற்கான நேரம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பொறுப்புக்கூறல் விடயங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையும், இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் தமது பதிலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. All yahoodi kaafir same team
    All are our enemies.
    Whats happrning in srilanka
    Everything by foreign countries yahoodi s plan.
    Wr are muslims only in a name.
    We dont obey quran hadees
    Ahlaq in daily life 5times prayers also weak .each other family arguing fighting not unity in our society.
    Thise who are educated in dunya and aahira sariya studied people also not unity among us.
    Then Allah how will help us

    ReplyDelete

Powered by Blogger.