Header Ads



பயங்கரவாதிகளிற்கு நிதி வழங்கிய விடயம், ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையில் இல்லை - சஜித்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கை முழுமையற்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் சூத்திரதாரி யார், அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதா என்பது குறித்து எந்த தகவலும் அறிக்கையில் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் நாயகம ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தாக்குதலை மேற் கொண்டவர்களை விட முக்கியமான குழுவொன்று தாக்குதலின் பின்னணியிலிருந்தது என தெரிவித்திருந்தது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

2010 முதல் 2014 முதல் ஆட்சியிலிருந்தவர்கள் பயங்கரவாதிகளிற்கு நிதி வழங்கினார்கள் என ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப் பட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் ஆணைக்குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.