Header Ads



விட்டுக் கொடுப்புகளும், தியாகங்களும் தேவை..!!


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்டால்  அதற்கு ஒரு வரைவிலக்கணத்தை கூற முடியாது. ஏனென்றால் அது தனியாக விளக்கம் கூறக்கூடிய சொல்லல்ல. ஆனால் அதனுடன் இன்னுமொரு சொல்லை இணைத்து கேட்கும்போது அதற்கான விளக்கத்தை கொடுக்கலாம். நாட்டுச் சுதந்திரம் ,பேச்சுச் சுதந்திரம் ,மதச் சுதந்திரம் ,எழுத்து சுதந்திரம் இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். அவற்றுக்கான விளக்கங்களையும் தெளிவாக கொடுக்கலாம். 

 இந்த சுதந்திரமானது எல்லா இடத்திலும் சமமாக இருக்க மாட்டாது. வீட்டை எடுத்துக் கொண்டால் தந்தைக்கு உள்ள சுதந்திரம் தாய்க்கு இல்லை. அதேபோல் தாய்க்கு உள்ள சுதந்திரம் பிள்ளைகளுக்கு இல்லை. பறவைகளுக்கு உள்ள சுதந்திரம் விலங்குகளுக்கு இல்லை. பெரும்பான்மை இனத்துக்கு உள்ள சுதந்திரம் சிறுபான்மைக்கு இல்லை. இப்படியான ஏற்றத்  தாழ்வுகளை எங்கும் காணலாம்.

இன்று இலங்கையில் சுதந்திர தினமாகும். காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு இலங்கை சுதந்திர நாடாக மீண்டும் பிரகடனப்படுத்திய தினமாக இது அமைந்துள்ளது. இந்த சுதந்திரமானது தனி ஒரு இனத்துக்கு சொந்தமானது அல்ல. இன மத பேதமின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவராலும் போராடிப் பெற்றதே இந்த சுதந்திர மாகும். இதனை நாம் எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே கொண்டாட வேண்டும். இன்று இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் சுதந்திர தினத்தை கொண்டாட கூடாது என்ற அடிப்படையில் விஷமத்தனமான பிரச்சாரத்தை ஒரு குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எமக்கு இருக்கும் உரிமையை இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது. சுருங்கக்கூறின் சுதந்திர தினத்தை கொண்டாட எமக்கு இருக்கும் சுதந்திரத்தை இல்லாமல் செய்து அதற்கு ஒரு வேலியை  நாமே போட முனையும் ஒரு முயற்சி.

மதக் கட்டுப்பாடு என்று கூறிக்கொண்டு உடைகளுக்கு வேலியைப் போட்டோம். மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று இரண்டாக கல்வியை பிரித்து வேலிகளை போட்டோம். எமக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் இடையே இருந்த நல்லிணக்கத்தை பிரித்து அரசியல் நோக்கங்களுக்காக வேலிகளைப் போட்டோம். இந்த வேலிகள் எல்லாம் நாம் இழந்த  சுதந்திரங்கள் ஆகும். இந்த வேலிகள் இல்லாது எமது சமூகம் வாழ்ந்த காலத்தை பின்னோக்கி பார்க்க  வேண்டும்.

 அக்காலத்தில் நாம் கௌரவமாக வாழ வில்லையா? சுதந்திரமாக வாழவில்லையா?, பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக இணக்கப்பாட்டுடன் வாழவில்லையா?

இறைநம்பிக்கை என்பது உடையுடன் அல்லது கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. அவற்றினால் இறை விசுவாசத்தை மாற்ற முடியாது. எமது இறை விசுவாசத்தை உறுதியாக பிடித்துக்கொண்டு இலங்கையர் என்ற அடிப்படையில் எல்லோரும் இன மத கலாசார வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்துடன் வாழும் வழிவகைகளை நாம் மீண்டும் தேட வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். நாம் போட்ட சில வேலிகளை உடைக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. எமது சமூகம் பற்றி ஏனைய சமூகத்துக்கு இருக்கும் சந்தேகங்களை நீக்க வேண்டி உள்ளது.

இந்த நாட்டிலேயே நாம் சிறுபான்மை சமூகமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். முற்று முழுதான இஸ்லாமிய வாழ்க்கை முறையை இங்கு அமல்படுத்த முடியாது. ஏனைய சமூகங்களுடன் ஒன்றாக கலந்து ஒற்றுமையுடன் வாழும் வழிமுறைகளைக் கண்டறிந்து அதன்படி வாழ்வோம்.அதற்காக  சில விட்டுக் கொடுப்புகளும் தியாகங்களும் கூட நாம் செய்யவேண்டி ஏற்படலாம். அதேபோல் அவை நமக்கு பல்வேறுபட்ட சுதந்திரங்களையும் தரலாம்.

7 comments:

  1. கரைச்சல் இல்லை ...😄😄😄😄

    ReplyDelete
  2. அப்படி ஒரு வெட்கங்கெட்ட சுதந்திரம் எமக்கு தேவையில்லை.

    ReplyDelete
  3. உண்மையான சுதந்திரம் எது.

    உண்மையான சுதந்திரம் என்பது அடுத்தவரை அடிமைப்படுத்தாது அடுத்தவன் வலியை தன் வலியாகவும், தான் விரும்பும் நல்வாழ்வை அடுத்தவர்களும் அடையவேண்டுமென்ற மனோநிலையும் நாட்டு மக்களிடையேயும் ஆட்சியாளர்களிடையேயும் வளரும்போதுதான் சாத்தியப்படும்.

    அதற்கு நாம் இன்னும் பல ஆண்டுகள் பயணிக்க வேண்டும்.அதுவரை நாம் மகிழ்ச்சியுறும் சுதந்திரம் என்பது விதேசிகளின் ஆதிக்கத்திலிருந்து சுதேசிகளின் கைகளுக்கு மாறிய சுதந்திரத்தைத்தான்.

    வெளிச்சக்திகளின் நேரடி ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும் குறைந்தபட்சம் சுதந்திரம்தான்.ஆனால் இனவாதம் ஒழிந்து ஒட்டுமொத்த இலங்கையரின் நலன்நாடும் சுதந்திர பூமியாக இலங்கை மாறுவதுதான் உண்மையில் சிறந்த சுதந்திரம்.

    ReplyDelete
  4. மண்ணில்
    Great article. Thanks.



    ReplyDelete
  5. தலைப்புக்கு ஏற்றவிதமாக இந்த ஆக்கம் இருப்பதாக எனக்குப்படவில்லை. இரண்டொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் மேற்சொல்லப்பட்ட தலைப்பில் பத்;தி பத்தியாக எழுதி சுதந்திரம் என்றால் என்ன? அதனை எவ்வாறு மிளிரச் செய்யலாம். அதன்மூலம் நல்லிணக்கத்தினையும் பொறுமையையும் சமாதானத்தையும் சகவாழ்வினையும் நாமும் இலங்கையர் என்ற அமைப்பில் சமூக மட்டங்களில் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பனபோன்ற பல்வேறு விடயங்களையும் சேர்த்து எழுதியிருந்தால் வாசகர்களுக்கு அப்பத்தை தேனில் குழைத்து சாப்பிட்டதுபோல் இருக்கும். அதிகமான வாசகர்கள் தம் பதிவுகள் Jaffna Muslim ல் வருவதில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் இப்படியான சந்தர்ப்பங்களை நன்முறையில் பயன்படுத்தி கற்றவரகள், அறிஞர்கள் எவராக இருப்பினும்; பயனுள்ள விடயங்களை வாசகர்களுக்கு வழங்க முன்வரல் வேண்டும். எதிர்காலத்தில் Jaffna Muslim வினை ஒரு பாடசாலையாகவும் எழுதுபவரகள் தம்மை ஆசிரியர்களாகவும் வாசகர்களைத் தம் மாணவர்களாகவும் எண்ணி தமது ஆக்கங்களை கவனமாக செவ்வைப்படுத்தி அவற்றை வழங்க முன்வரல் வேண்டும். Jaffna Muslim என்பது ஒரு இலவசப் பத்திரிகை அல்ல. அதன் ஆசிரியர்கள் “எத்தனையோ விட்டுக் கொடுப்புகளையும் தியாகங்களை”யும் செய்துதான் மக்களுக்கு தொடர்ந்து அறிவூட்டிக் கொண்டு வருகின்றனர். இதனை நாங்கள் அதிக கவனத்திற்கு எடுத்து மிகவும் பயனுள்ள ஆக்கங்களை Jaffna Muslim மூலமாக வாசகர்களுக்குக் கொடுக்க முன்வரல் வேண்டும்.

    ReplyDelete
  6. இந்த ஆக்கத்தில் இங்கு முற்றுமுழுதான இஸ்லாமிய வாழ்க்கை முறையை அமுல்படுத்த முடியாது என குறிப்பிடப்படுகிறது.அதற்காக சிவில் உரிமைகளையும் அமுல்படுத்த முடியாது போல் தர்க்கிக்க பட்டுள்ளது.யாப்பில் சமய சுதந்திரம் கூறப்பட்டுள்ளது . அப்படியான நிலையில் அது இல்லை எனின் எப்படி ஜனநாயகமுமில்லை என்பதே பொருள்.அப்படி ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுத்து பெறப்படுவது எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்

    ReplyDelete
  7. It is very hard to agree with the writer. If we are Muslims and if we REALLY Believe in Islam, there is NO NEED to give up any of our Rights, not just in tiny Sri Lanka, but anywhere else in the world.

    Almighty Allah (Swt), who is ALL KNOWING and ALL POWERFUL Has Revealed His Religion for us, for Not just for a particular time or place but for ALL Times and All Places. If we Really Believe in Him and His Deen, then it is for us to Follow His Deen at All Times and in ALL Places.

    It is NOT for any man from anywhere in the world to pick and choose what to Follow and What to Discard as he deems fit.

    Sri Lanka is a tiny part of the Vast Earth with a population Not even 0.3% of the world population. And the Muslims in Sri Lanka constitute just a mere 0.1% of the world Muslim population. How ridiculous of us it is even to think of changing our Religious practices only to be in the good books of a tiny fraction of those who Reject Allah (Swt) and His Deen? Who is more Important for a Muslim? Allah (Swt) and His Deen or a tiny fraction of humanity in Sri Lanka who Reject Him?

    Let us think Clearly and let us understand Our Creator and His Deen and practice His Deen properly. The Problem is that we are all namesake Muslims who have little or no Knowledge or understanding of Islam and project a poor Image of Islam. Sadly, even the so-called Ulema are no exception.

    Most Certainly, there is an Urgent Need for change. That Need is for us to properly learn, understand and Live Islam. Let us make no Mistake about it.

    A clear example that we should Remember is Indonesia which was a 100% Pagan country about 500 years back. Then it became a Muslim majority country. How did that happen? It is because of the way the early Muslim visitors to Indonesia, who were traders, lived and practiced Islam. When they sold their goods, their margins were small and whenever there were defects in the goods, they reduced the prices and told the customers why the prices were reduced which NO others did. The Indonesians who were surprised asked the traders why they are talking about the defects and reducing the prices. The traders replied that it is because they are obliged to do so because of their religion, Islam. This reply, surprised the Indonesians who wanted to learn Islam in which the traders helped and eventually Islam spread like wildfire in Indonesia.

    Wouldn't what happened in Indonesia happen in Sri Lanka and in other countries where Muslims are a minority, if only the Muslims LIVED Islam the way early Muslim visitors to Indonesia did?

    ReplyDelete

Powered by Blogger.