Header Ads



பிரதமரின் தலைமையில் நடந்த, சந்திரிக்காவின் கணவர் விஜய குமாரதுங்க நினைவுதின நிகழ்வு


இலங்கை மக்கள் கட்சியின் நிறுவுனர் அமரர் விஜய குமாரதுங்க அவர்களின் 33ஆவது நினைவு தின நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு புதிய நகரசபை மண்டத்தில் இன்று 2021.02.21 பிற்பகல் இடம்பெற்றது.

விஜய குமாரதுங்க அவர்களின் 33ஆவது நினைவு தின உரையை இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டிவ்.குணசேகர நிகழ்த்தினார்.

அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை. இந்த விடயங்களில் விஜய குமாரதுங்க அவர்கள் உறுதியாக நின்றார். விஜய குமாரதுங்க அவர்களுடன் மிக நெருங்கி பழகியவர் என்ற வகையில் நான் அவரிடம் கண்ட விசேட அம்சம் இதுவாகும். அக்காரணத்தினாலேயே பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முகாம்களுக்கு செல்லும் அளவிற்கு அவரிடம் பலம் காணப்பட்டது என டிவ். குணசேகர அவர்கள் தெரிவித்தார்.

குறித்த நினைவு தின நிகழ்வில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன, சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, இலங்கை மக்கள் கட்சியின் செயலாளர் அசங்க நவரத்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பிரதமர் ஊடக பிரிவு

1 comment:

Powered by Blogger.