Header Ads



இம்ரானுடனான ஹக்கீம், றிசாத்தின் சந்திப்பு ரத்து - பாதுகாப்புத்தான் காரணமாம், அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லையாம் - அமைச்சர் கெஹெலிய


 -T Kural -

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ரவூப்ஹக்கீம் ரிசாத் பதியுதீன் உடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களிற்காகவே இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான முடிவுகளை இருநாடுகளையும் சேர்ந்த அரசியல்குழுவொன்றே எடுக்கின்றது அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் சந்திப்பு இடம்பெறும் பகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு கரிசனைகளை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இந்த முடிவை அரசு எடுத்ததா பாகிஸ்தான் தூதரகம் எடுத்ததா? அரசு எடுத்த முடிவானால் கண்டனத்துக்கும் போராட்டத்துக்கும் உரியது.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உள்நாட்டிலேயே எதையும் செய்ய திராணியற்ற இவர்கள் இம்ரான்கானை சந்தித்து எதைச் சாதிக்கப்போகிறார்கள்.
    இனவாதிகளான இவர்களினாலயே நம் நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளது.

    ReplyDelete
  3. அரசாங்கத்தின் பாதுகாப்பு காரணமாக இருக்குமோ?

    ReplyDelete

Powered by Blogger.