இலங்கையணி பயிற்சியாளருக்கும், அணி வீரர் லஹிருக்கும் கொரோனா
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமான்ன மற்றும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையலான போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பில் விசாரணை செய்வதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment