சவுதி மன்னர் சல்மானுடன், ஜோ பைடன் உரையாடல்
சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த உறுதி பூண்டனர்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தேதி பதவி ஏற்றார். இதையடுத்து அவர் உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இதுவரை சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோருடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானிடம் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாட்டுத் தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்தும் விவாதித்தனர்.
Post a Comment