செவ்வாய் கோளில் விண்கலம், முஹம்மது ஆபித் உள்ளிட்டவர்களின் மகத்தான சாதனை.
- Saleem -
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து சிவப்பு கோள் என்றழைக்கப்படும் செவ்வாய் கோளிற்கு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் (Perseverance ) என்ற ரோவர் (சுற்றி வரும் ரோபோ) பிப்.18 அன்று தரையிறக்கப்பட்டது.
சுமார் 300 கோடி டாலர் முதலீட்டில் பூமியிலிருந்து 47.2 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கோளை மணிக்கு 19 ஆயிரம் கி.மீ.வேகத்தில் 7 மாதங்கள் விண்கலத்தில் பயணம் செய்து பெர்சவரன்ஸ் ரோவர் வாகனம் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது.
பெருவெடிப்பு (Bing Bang) நடைபெற்ற துவக்க காலங்களில் (சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு) செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்ததற்கான உயிரியல் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து இந்த பெர்சவரன்ஸ் ரோவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
செவ்வாய் கோளிலிருந்து பாறை துண்டுகளையும் மண்ணையும் பூமிக்கு கொண்டு வருவதற்காக பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தில் Ingenuity என்ற ஒரு சிறிய ரக ரோபோ வானுார்தியையும் (Robotic Rotorcraft) முதன் முறையாக அனுப்பியுள்ளனர் என்பது இதன் தனிச்சிறப்பு.
செவ்வாய் கோளில் நிறைந்திருக்கும் கரிவளி (carbon dioxide) யை உயிர்வளி (Oxygen) யாக மாற்றும் Moxie என்ற கருவியும் பெர்சவரன்ஸ் ரோவரில் இடம்பெற்றுள்ளது.இந்த சோதனை வெற்றியடைந்தால் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான காற்றை உருவாக்கிவிட முடியும்.
இந்த மகத்தான பணியில் இந்தியாவின் சுவாதி மோகன் உள்ளிட்ட பலநூறுபேர் அங்கம் வகிக்கின்றனர்.
அதில் முஹம்மது ஆபித் என்ற துனிசியா நாட்டைச் சேர்ந்தவரும் ஒருவர். இவர் நாசாவின் செவ்வாய் கோள் திட்டத்தில் துணை தலைமை இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றுகிறார். Ingenuity என்ற வானுார்தியை வடிவமைத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானது.துனிசியா நாடே இவரை கொண்டாடுகிறது.
ஆன்மிகமும் - ஆராய்ச்சிகளும் ஒரு மூமினுடைய இரு கண்கள்.
உம்மத்தின் இந்த இரு கண்களும் ஒளிமயமாக இயங்கிய மத்திய காலங்களில் உலகின் அறிவுத்துறை தலைவர்களாக முஸ்லிம்களை அல்லாஹ் உயர்த்தி வைத்திருந்தான்.
கடந்த சில காலங்களாக கண் இருந்தும் குருடர்களாக முஸ்லிம்கள் மாறிப்போனதால் மேற்கத்திய உலகத்தின் இன்றைய அறிவியல் வளர்ச்சிகளை "ஆ" வென்று அண்ணாந்து பார்க்கும் அவல நிலைக்கு ஆளாகிவிட்டோம்.
மாற்றம் ஒன்றே நிலையானது என்ற இயல்பு கொண்ட இந்த உலகில் யாருடைய எழுச்சியும் எப்படி நிரந்தரம் இல்லையோ அதுபோல யாருடைய வீழ்ச்சியும் நிரந்தரம் இல்லை.
வீட்டில் வளரும் பிள்ளைகளின் அறிவுக் கண்களை கூர்தீட்டுவோம்.
ஒரு கண் ஆன்மிகத்திலும் மறு கண் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் ஆழமாக ஊடுருவிச் செல்லும் இயல்பை அவர்களுக்குள் மீண்டும் உண்டாக்குவோம்.
Great Ending Message to our society
ReplyDeleteGreat message to our society. In Sha Allah one day our glories raise again.
ReplyDelete