பாராளுமன்ற அமர்வை நடத்த முடியுமென்றால் ஏன் இம்ரான்கான் உரையாற்ற அனுமதிக்க முடியாது..? மொன்டிசூரி விளையாட்டைப் போன்று நடந்து கொள்கிறார்கள்
இன்று நாடு முகம் கொடுத்துள்ள சவால்களுக்கு கற்பனைக் கதைகளைக் கூறி அவதானங்களை வேறு திசைகளின் பக்கம் திருப்பாமல் உன்மையாக எதிர்நோக்கி தீரவுகளை கான முன் அவர் வேண்டும் எனத் தெரிவித்தார்.பொய்களைக் கூறி அவதானங்களை வேறு திசைகளின் பக்கம் திருப்பாமல் உன்மைகளை சமூகயப்படுத்தி ஊடக தர்மங்களின் பிரகாரம் செயற்பட வேண்டிய பெறுப்பு ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர் தெடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காணின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது பிழையான விடயமாகும்.இராஜதந்திர ரீதியாக அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒர் நிலையாகும்.இவ்வாறு ஏலவே அழைத்து பின்னர் இரத்துச் செய்வதென்பது நாட்டின் வெளிவிவகார கொள்கையின் பிழையான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது.ஏதேனும் பிரச்சிணைகள் இருப்பின் ஏலவே ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.அழைப்பு விடுக்க முன்னர் இது குறித்து ஆராயப்பட்டிருக்க வேண்டும்.அழைப்பு விடுத்த பின்னர் இரத்துச் செய்வது குறித்து நாங்கள் சிந்தக்க வேண்டும்.இம்ரான் காண் உலகம் ஒப்புக் கொண்ட ஒர் இளம் தலைவர். இராஜதந்திர மரபுகள் பின்பற்றப்பட வேண்டும்.இல்லையேல் அது நாட்டிற்கே தீங்காக அமையும்.
இலங்கைக்கு அன்மையிலுள்ள இரு நட்பு நாடுகளுடன் எமக்கு வரலாற்று ரீதியாக மதிப்புகள் உள்ளன.அவை பாதுகாக்கப்பட வேண்டும்.இரண்டு நாடுகளும் எமக்கு முக்கியம்.இலங்கை சுதந்திரம் பெற்ற சந்தர்ப்பத்தில்
இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டவர் டி.பி.ஜயதிலக்க அவர்கள்.அவர் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்.அதே போன்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டவர் டி.பி.ஜயா அவர்கள்.அவரும் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர்.அவருடைய பதவியின் இரண்டாம் தவனை முடிவடைந்தும் பாகிஸ்தான் அரசு மீண்டும் அவரை தூதுவராக நியமிக்குமாறு கேரியது மாத்திரமல்லாமல் பாகிஸ்தான் அரசு அவருக்கு பிரஜா உரிமையையும் வழங்க முன்வந்தது.ஆனால் டி.பி.ஜயா அவர்கள் நாட்டுப்பற்றிற்காக கொளரவாமாக விளகிக் கொண்டார்.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வெளிவிவகார உறவுகள் எமக்கு உண்டு.கோவிட் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவரின் பாராளுமன்ற உரையை இரத்துச் செய்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியிருப்பதை பார்த்தேன்.அது உன்மையாக இருந்தால் தற்போதும் பாராளுமன்றம் கூட முடியும் என்றால் ஏன் இவ்வாறு ஒர் நாட்டுத் தலைவரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அரசாங்கம் மொன்டிசூரி பிள்ளைகளைகளின் விளையாட்டைப் போன்று நடந்து கொள்கிறது என்று கேள்வி எழுப்பினார்.இன்று நாட்டின் வெளிவிவகார கொள்கை ஓர் மொன்டிசூரி பிள்ளைகளின் விளையாட்டை ஒத்ததாக இருக்கிறது.பிரச்சிணைகள் இருப்பின் ஏலவே ஆராய்ந்து முடிவெடுத்திருக்க வேண்டும்.இராஜதந்திர மரபுகள் பின்பற்றியிருக்க வேண்டும்.இன்று இம்ரான் கானின் விஜயத்தை கையால்வது வெளிவிவகார அமைச்சா? அல்லது ஜனாதிபதி செயலகமா என்று தெரியாமல் இருக்கிறது.எதற்கும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஓர் வழிமுறை இருக்கிறது.அதை பின்பற்றுங்கள்.அதை விடுத்து ஒரு தலைபட்சமாக செயற்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.
இராஜதந்திர மரபுகள் மீறப்பட்டுள்ளன.அரச தலைவர்களின் வருகையின் போது எதிர்க் கட்சித் தலைவருக்கும் சந்திப்பிற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.இது சம்பிரதாயம்.இந்த மரபு இம்ரான் கானின் வருகையில் மீறப்பட்டுள்ளது.
நாடு இன்று பிராந்திய ரீதியாக பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது.இவற்றுக்கு இந்த அரசாங்கம் உன்மையாக யாதார்த்தமாக முகம் கொடுக்க வேண்டும்
இன்று ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முகம் கொடுப்பது பழைய பிரச்சிணைகளைகளுக்கல்ல.
முற்றிலும் புதிய பிரச்சிணைகளுக்காகும்.ஆறு புதிய விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளார்.இவை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள்,மனித உரிமைகளுடன் தொடர்பான விடயங்களாகும்.ஜனநாயக கட்டமைப்பை விட்டும் வேறு வழிமுறைகள் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்தன் விளைவுகள் தான் இது.அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளின் பிரகாரம் ஆட்சி அதிகாரங்களை முன்னெடுக்க இந்த அரசாங்கம் இனிமோலாவது நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டும்.
ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை இங்கு சுருக்கமாக முன்வைக்க விரும்புகிறேன்.
01.சிவில் நிர்வாகம் இரானுவ ஆட்சியை நோக்கி செல்வது தொடர்பானது.
02.அதிகார பரவலாக்கலை இல்லாமல் ஆக்குவது தொடர்பானது.(சட்டத்துறை,நீதித் துறை மற்றும் நிர்வாகத்துறைகளுக்கிடையிலான அதிகார பரவலாக்கம்)
03).குற்றவியலும் மனித உரிமைகளில் அரசியல் தலையிடுகள் தொடர்பானது.
04).ஏனைய இனத்துவங்களை ஒதுக்கிய,பொருன்பான்மைவாதம் குறித்த முன்வருகையும் தொடர்பானது.
05).தனிநபரின் தனிப்பட்ட விடயங்களையும் தனி மனித சுதந்திரங்களையும் ஆராய்வது தொடர்பானது.
06).புதிய மனித உரிமைகள் பிரச்சிணைகள் என்பனவாகும்.
மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்விக்குட்படுத்தும் மேற்கூறிய விடயங்கள் செந்த நாட்டின் பிரஜைகளுடைய மனித உரிமைகள் பற்றியதாகும்.ஜனநாயக உரிமைகள் பற்றியதாகும்.
சர்வதேசம் அங்கீகரித்த காணாமல் போனோர் அலுவலகம்,இழப்பீட்டு அலுவலகம் போன்ற உள்ளக பெறிமுறைகளை ஏற்பட்டுத்தி தனிமைப்பட்டிருந்த நாட்டை பல்பக்க பங்களார்களுடன் இனைத்து நல்ல மதிப்பொன்றை ஏற்படுத்தி வந்ததை இந்த அரசாங்கம் தலைகீழாக மாற்றி வருகிறது.பெறுப்புப்பளிப்பதிலிருந்து நாங்கள் விடுபட முடியாது.இனத்துவ முத்திரைகளைப் பதித்து ஒருவரின் பிரஜா உரிமைகளை இல்லாமல் ஆக்க முடியாது.
அடுத்த தலைமுறையினருக்கும் ஜனநாயக நாட்டை கையளிக்கும் பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.
நாட்டின் பொருளாதார பிரச்சிணைகள் குறித்த உன்மையான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதார சவால்களை நாடாக முகம் கொடுக்க முன்வர வேண்டும்.
கோவிட் தடுப்பூசிகள் குறித்து பேசிய போது ஆரம்ப நாட்களில் இழிவுபடுத்தியவர்கள் இன்று தமது நிலைப்பாடுகளை மாற்றி தடுப்பூசிகளின் பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளனர்.இந்த விடயத்தில் ஏனைய நாடுகள் முற்போக்காக சிந்தித்து நடவடிக்கைகள் எடுத்து பல கட்ட நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளன.மாயைகளின் பக்கம் செல்வதை நிறுத்தி கோவிட் விடயங்களை யதார்த்தமாக கையால அரசாங்கம் முனவர வேண்டும் என தெரிவித்தார்.
ஊடகங்கள் தகவல்களை உன்மையாக நாட்டுக்குச் சொல்ல வேண்டும்.அதன்பாலான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என மோலும் தெரிவித்தார்.
Post a Comment