இந்தியா எங்களை கைவிட முடியாது, ஜெனீவா ஆதரவை மீண்டும் கோரியது இலங்கை
இந்தியா ஜெனீவாவில் தனது செயல்வடிவிலான ஆதரவை இலங்கைக்கு வழங்கவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து நாளிதழிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா எங்களை கைவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய நாடுகள் ஜெனீவாவில்ஆதரவளிக்காவிட்டால் இலங்கை மிகவும் குழப்பமடையும் என தெரிவித்துள்ள ஜயனத்கொலம்பகே, ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பாக்கிஸ்தான் இந்தியா நேபாளம் பங்களாதேஸ் ஆகிய நாடுகள் இலங்கையை போன்று கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாலும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எங்கள் ஜனாதிபதி ஆதரவுகோரும் கடிதத்தை முதலில் இந்திய பிரதமருக்கே அனுப்பினார் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார செயலாளர், ஏனென்றால் தென்னாசிய ஒற்றுமை குறித்து நாங்கள் உணர்வுபூர்வமாகஉள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதன் அயல்நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது, நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்றை கேட்கவில்லை நாங்கள் அயலவர்களிற்கு முன்னுரிமை என்றஇந்தியாவின் கொள்கையை அடிப்படையாக நாங்கள் இந்ம வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment