Header Ads



அங்கொடை லொக்காவின் நெருங்கிய, உறவினர்களின் மரபணுவை கோரும் இந்தியா


அங்கொடை லொக்காவின் நெருங்கிய உறவினர்களின் மரபணு மாதிரிகளை அனுப்புமாறு இந்தியா கோரியுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா என அழைக்கப்படும் லசந்த சந்தன பெரேராவின் நெருங்கிய உறவினரின் (டி.என்.ஏ) மரபணு மாதிரிகளை மாதிரியை அனுப்புமாறு இந்தியத் தேசிய புலனாய்வு பிரிவு இலங்கையைக் கோரியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் உயிரிழந்து விட்ட தாக நம்பப்படும் அங்கொட லொக்காவின் பிரேத பரி சோதனை குறித்து விஞ்ஞான ரீதியில் உறுதி செய் வதற்காக அக்கொடை லொக்காவின் நெருங்கிய உற வினர்களின் மரபணு மாதிரிகளை அனுப்புமாறு இந்தியா கோரியுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.