இலங்கையையும், சிரியாவையும் பிரிட்டன் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும் - வெளிவிவகார அமைச்சர்
-TK
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் கவனத்தை செலுத்துவதற்காக பிரிட்டன் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் இன்று -22- தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப அமர்விற்கான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையையும் சிரியாவையும் பிரிட்டிஸ் அரசாங்கம் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ள டொமனிக் ரப் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவனத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்காக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம் எனவும் அவர்n தெரிவித்துள்ளார்.
மனிதஉரிமைகளை திட்டமிட்ட அடிப்படையில் மீறுபவர்களை பொறுப்புக்கூறச்செய்யும் வலுவான சர்வசே அமைப்பினை நாங்கள் விரும்புகின்றோம் மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்யவேண்டும் அல்லது அதன் நற்பெயர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
வீட்றோ அதிகாரமுள்ள இலங்கையின் நண்பர்களாக சீனாவுக்கும் ரூசியாவுக்கும் சந்தர்பம் வளங்காமல் பெறக்கூடிய உயர்ந்த பட்ச்ச நீதி இம்முறை கிடைக்கும். நிலமையை உணராமல் மேற்குலகின் நிலைபாடு போதாது என தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பது உள்ளதையும் கெடுப்பதாகவே முடியும். நாம் ஒருபோதும் போர்க்குற்றவாளிகளையும் இலங்கை அரசையும் காப்பாற்றிவிடக்கூடாது.
ReplyDelete