எனது உயிருள்ள வரை, பலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுப்பேன் - பத்தேகம சமித தேரர்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களின் அவலங்கள் குறித்து நான் நன்கு அறிவேன். அம்மக்களின் விடுதலைக்காக நான் தொடர்ந்து வருகிறேன். எனது உயிருள்ள வரைக்கும் பலஸ்தீன விடுதலைக்கான குரல் கொடுப்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்தார்.
காலிக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா ஸைத்தைச் சந்தித்து உரையாடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் காலி கிளையின் தலைவராக விளங்கும் பத்தேகம சமித்த தேரர், பலஸ்தீன விடுதலைக்காக சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் முக்கிய பெளத்த தலைவராவார்.
அண்மையில் சிரச இலட்சாதிபதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சுக்ரா முனவ்வரின் இல்லத்துக்கு கடந்த திங்கட் கிழமை பலஸ்தீன தூதுவர் விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தில் பத்தேகம சமித தேரரும் பங்குபற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.- Vidivelli
இந்த நல்ல நோக்கத்துடன் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முதலாவதாக குரல் கொடுங்கள்
ReplyDeleteசிலரின் இலாபத்திட்காக அநியாயமாக முஸ்லிம்மக்களும் அவர்களின் சிசுகளும் நெருப்பில் தகனம் செய்யப்படும் இந்த நாசகார செயலுக்கு எதிராக குரல் கொடுத்து அதை நிருத்துங்கள்!