சபாநாயகர் தப்பி ஓடியதாக சஜித் குற்றச்சாட்டு - ரஞ்சனுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
- TM -
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவது தொடர்பிலான வாதங்களை முன்வைத்தே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை நாளை (24) சபைக்கு அழைத்துவருமாறும் கோரினார்.
மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகரவை, சபைக்கு அழைத்து வரமுடியுமாயின் ஏன், மற்றுமொரு எம்.பியான ரஞ்சன் ராமநாயக்கவை ஏன்? அழைத்துவரமுடியாது எனக் கேட்டார்.
2
பாராளுமன்றத்திலிருந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தப்பியோடிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபையில் இன்று குற்றஞ்சாட்டினார்.
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று அறிவிப்பதாக, சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஆனால், அதற்கு பதிலளிக்காமல், சபாநாயகர் தப்பியோடிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், எழுந்த ஆளும் கட்சியின் சபைமுதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ தேசிய ரீதியில் முக்கியமான கலந்துரையாடலுக்கு சபாநாயகர், தலைமைத்தாங்க சென்றுவிட்டார். அவர், தப்பியோடவில்லை, சபாநாயகர் தொடர்பில் தப்பான கருத்துகளை கூறவேண்டாம்”
Post a Comment