டிப்போ விவகாரம் - இலங்கை போக்குவரத்து சபை தலைவரை சந்தித்த மு.கா எம்பிக்கள்
மேலும் பேசிய அவர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை சந்திக்கும் நிகழ்வில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டு சம்மாந்துறை பிரதேசத்தில் அந்த டிப்போவின் தேவைகள் பற்றியும், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் தனது நிலைப்பாட்டை கைவிடுவதாக உறுதியளித்தார்.
மேலும் டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் நிலைப்பாட்டை ரத்து செய்துள்ள விடயத்தை அமுல்படுத்தி அந்த டிப்போவை மேலும் அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி இந்த டிப்போவின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தலைமையிலான குழுவொன்று கள விஜயம் செய்ய உள்ளது என்றார்.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
THIS ALL DRAMA , HIDING OUT JANNSA MATTERS , FORGIVENESS IS DEPENDING ON YOUR RESIGN YOUR POST , FIRST DO ,
ReplyDeleteANOTHER MATTER DRAMA TAMIL DIVISION ,
GIVE MONEY TO KARANA AMMAN , VEEYALANTHRAN ,
START PROTEST AGAINST TO BE GIVEN TAMIL DIVISION,
YOU THIS SIDE ,
OOO MUSLIM TAMIL PEOPLE ASKING FOR DIVIDED DIVISION
HOW LONG YOUR ,ANOTHER MULIM PARTY DRAMA ALSO