கொழும்பு மாநகரசபையை கைப்பற்றுவது தொடர்பான வியூகம், சஜித் - மனோ சந்திப்பில் பேச்சு
ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக இந்த புதிய தேசிய கூட்டணி ஸ்தாபிக்கப்படும் என இன்று எதிர்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டமைப்பில் முதல் பங்காளி கட்சியாக, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கரங்கோர்க்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.
இன்று -03- முற்பகல் கொழும்பு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் உத்தேச யாப்பு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் கூட்டணி கைப்பற்றுவது தொடர்பான வியூகம், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான வியூகம், நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.
Post a Comment