யாழ். வைத்தியசாலையில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை சுகதேகியது
(சி.எல்.சிசில்)
யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் 6 மாத காலத்திலேயே ஈன்றெடுத்த சிசு ஒன்று 600 கிராம் எடையுடன் காணப்பட்டது. எனினும் மருத்துவர்களின் கடும் முயற்சியால் அக்குழந்தை பூரண நலன் பெற்றுள்ளமை தெரிய வருகின்றது.
சாதாரண கர்ப்ப காலம் 40 வாரங்களாக உள்ளபோதும் 24 வார கர்ப்பத்தில் பிறந்தமையால் அந்தக் குழந்தை 600 கிராம் எடையுடனேயே இருந்தது.
இதனால், சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் டீபோல் நவரட்ண தலைமையிலான மருத்துவக் குழுவினர் 4 மாதங்களாக எடுத்த முயற்சியால் குழந்தை பூரண நலமாக தற்போது தாயாருடன் வீடு சென்றுள்ளது. இது யாழ்.போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதலாவது சம்பவமாக பதிவிடப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலம் சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் வெற்றிடமாக இருந்தபோதும் தற்போது அந்த வெற்றிடம் நிரப்பப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேநேரம் தற்போது மற்றுமொரு தாயார் 25 வாரங்கள் கர்ப்ப காலத்தில் பிரசவித்த குழந்தையும் சுகதேகியாக வைத்தியசாலையில் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Great Work. Well Done Hospital team..
ReplyDelete