கொரோனாவிலிருந்து குணமடைந்தோரிடம் 6 மாதம் நோய் எதிர்ப்பு தன்மை - ஆய்வில் கண்டுபிடிப்பு
கொவிட்–19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த பெரும்பாலோரின் உடலில் குறைந்தது ஆறு மாத காலம் நோய் எதிர்ப்புத் தன்மை அதிக அளவில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அத்தகைய நோய் எதிர்ப்புத் தன்மை, அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாக்க உதவுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் மீண்டும் அதிவேகமாக நோய்த்தொற்றுக்கு ஆளாவது அரிது என்பதை ஆய்வு உறுதிப்படுத்துவதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறினர்.
ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 99 வீதத்தினரின் உடலில், குறைந்தது மூன்று மாதத்துக்காவது நோய் எதிர்ப்புத் தன்மை நீடித்திருக்கிறது.
88 வீதத்தினரிடம் ஆறு மாதம் வரை நோய் எதிர்ப்புத் தன்மை நீடித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Post a Comment