பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும், இலங்கைக்கும் இன்று 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (முழு விபரம்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டு சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4, கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு
5, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
Haram or halal?
ReplyDelete